Tamil Nadu weatherman about fani cyclone: ஃபனி புயல் வீரியம் குறித்தும், தமிழகத்திற்கு அருகே அது வராமல் போனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறித்தும் பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் 'தமிழ்நாடு வெதர்மேன்' எனும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார்.
இது குறித்து அவரது பதிவில், "ஃபனி புயலால் தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று தொடக்க நிலை ஆய்வுகள், மாதிரிகள் தெரிவித்தன. ஆனால், தற்போது புயலின் நகர்வைப் பார்க்கும் போது, தமிழக கடற்கரையோரத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் கடந்து செல்லவே வாய்ப்புள்ளதாக பெரும்பாலான மாதிரிகள் தெரிவிக்கின்றன. எனவே, தமிழகத்தில் ஃபனி புயல் கடக்க வாய்ப்பில்லை.
மேலும் படிக்க - Fani cyclone chennai live updates: ஃபனி புயல் பற்றிய லைவ் அப்டேட்ஸ்
தமிழகத்துக்கு அருகே 150 கி.மீட்டருக்குள் புயல் கடக்கும் போது மட்டுமே நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், 300 கி.மீக்கு தொலைவில் கடக்கும் போது, மழைக்கான வாய்ப்பு குறைவு. மாறாக, மேற்கு திசையில் இருந்து ஒட்டுமொத்த ஈரப்பதத்தையும், வெப்பத்தையும் புயலானது இழுத்துக் கொண்டு கடக்கத் தொடங்கும். அப்போது, வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும். மேலும், கடற்கரையில் இருந்து கிழக்கில் இருந்து வரும் காற்றும் நிலப்பகுதிக்கு வராது என்பதால், வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
ஆகையால், இப்போதுள்ள மாடல்களின் முடிவின்படி, ஃபனி புயலால் முழுமையாக மழை கிடைக்கும் என்று கூறிவிட முடியாது. நாளை தான் தெளிவாக கூற முடியும். மழை எந்தளவிற்கு இருக்கும், எந்தெந்த மாவட்டங்களில் இருக்கும் என்பதை நாளை தான் கூற முடியும்.
மேலும் படிக்க - Tamil Nadu Weather: ‘ஃபனி’யால் மழை பெறும் மாவட்டங்கள் எவை? சென்னை நிலவரம் என்ன?
சில உதாரணங்கள் கூற வேண்டுமெனில், "கடந்த 1998ம் ஆண்டு மே 30ம் தேதி உருவான புயல், தமிழகத்துக்கு அருகே வந்து திரும்பிச் சென்றதால், ஏற்பட்ட வெயிலின் தாக்கம், வெப்ப அலையால், இந்தியாவில் 2,500 பேர் உயிரிழந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் 44.1 டிகிரி அதிகபட்சமாக இருந்திருக்கிறது.
அதேபோல், கடந்த 2003ம் ஆண்டு மே 31ம் தேதி தமிழகத்துக்கு அருகே வந்த புயல் பர்மா நோக்கிச் சென்றது. அப்போது ஏற்பட்ட வெயிலின் தாக்கத்தால் இந்தியாவில் 1000 பேர் உயிரிழந்தனர்" என்று பிரதீப் ஜான் தெரிவித்து இருக்கிறார்.