Advertisment

சென்னையில் மழை வாய்ப்பு; ஆனால் பயம் இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் எந்த பகுதிலும் கனமழை பெய்யாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் எந்த பகுதிலும் கனமழை பெய்யாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Advertisment

டிசம்பர் 3, 4 பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம்  மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. டிசம்பர் 17, 18 கனமழையால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக்கில் முக்கிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “ அத்து ஒரு வாரத்துக்கு தமிழ்கத்தில் எந்தப் பகுதியிலும் கனமழை பெய்யாது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலோரப் பகுதிகளில் கிறிஸ்துமஸ் அன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

புதுக்கோட்டை மற்றும் சிவங்கை பகுதிகளில் வரும் 27-ம் தேதி அதிகனமழை  பெய்யும் என்று வெளியான தகவல்கள் உண்மையற்றவை. அதனை யாரும் பகிர வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment