Tamilnadu weatherman posts today: கடலில் வீசிவரும் காற்று காரணமாக சென்னை சிட்டி பகுதியில் வெப்பநிலை 36 டிகிரியாக குறைந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாம் கடல் காற்றுக்கு நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், கடற்காற்றின் காரணமாக, சென்னை சிட்டி பகுதியில் வெப்பநிலை 36 டிகிரியாக குறைந்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் 43 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த வெப்பநிலை தற்போது 39 டிகிரி செல்சியசை ஒட்டியே உள்ளது.
Chennai weather: தமிழ்நாடு வெதர்மேன்
tamilnadu weatherman post about chennai weather today- இன்றைய வானிலை அறிக்கை
தமிழகத்தின் மேற்கு உட்புற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கன்னியாகுமரியில் மழை பெய்யலாம். வேலூரின் மேற்கு பகுதி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Read More: 12 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
பந்தனம்திட்டாவின் சிலபகுதிகள் , கொல்லம், திருவனந்தபுரம், இடுக்கி, வயநாடு, பாலக்காடு, மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. பெங்களூருவின் பலபகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.