தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.17) அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு அருகில் கரையை கடந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் இன்றைய சென்னை வானிலை நிலவரம் பற்றி பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று மதியம் முதல் ஒரு துளி மழை இல்லை. மேகங்கள் இல்லாத ஷெல் காற்றழுத்த தாழ்வு பகுதி நெல்லூருக்கு அருகில் நிலத்தை நோக்கி நகரும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். வெயில் நிலவும். KTCC (சென்னை) பகுதியில் பகலில் இன்று வெயில் அடிக்கும். அவ்வப்போது காற்றடிக்கக் கூடும்.
எனவே இன்று மாலை முதல் நாளை காலை வரை வெப்ப சலனம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேகங்கள் தரைப் பக்கத்திலிருந்து நகரும், கடல் பக்கத்திலிருந்து அல்ல.
சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். ஆங்காங்கே சாதாரண மழை பெய்யும். சில இடங்களில் மழை பெய்யும், சில இடங்களில் மழை பெய்யாது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“