வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே மழை தொடங்கி உள்ளது. நேற்று சென்னை மற்றும் புறநகர், கோவை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், அக்டோபர் 16ம் சென்னைக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/GSziwgDXo8TyTHyEYLok.jpg)
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறுகையில், வட தமிழகத்தின் மேல் மேகப்பந்து உருவாகி வருவதால் சென்னையில் மழை பெய்து வருகிறது. எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. இன்று பகல் நேரத்தில் விட்டுவிட்டு மழை பெய்யும். இரவு முதல் அதிகாலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று பகலில் விட்டு விட்டு மழை பெய்யும் என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் சென்று வரலாம். மிக கனமழைக்கான முக்கிய தேதிகள் வந்து கொண்டிருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 16-ம் தேதி சென்னை கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 16,17ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“