டெல்டா மாவட்டங்களில் இன்று இரவுக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், இமயமலைப்பகுதிகள், பிஹார், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்கண்ட், கர்நாடக, கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், ‘"தென்மேற்கு பருவமழை உச்சத்தை அடைந்து, இமயமலைப் பகுதிகள், பீகார், உத்தரப்பிரதேசம், இமாச்சல், உத்தரகாண்ட், ஜார்கண்ட், கோவா, மகாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்கள் மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை குறையத் தொடங்கி இருப்பதால், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை இன்று இரவுக்குள் பெய்யக்கூடும்.
குறிப்பாக, மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு டெல்டா மாவட்டங்களான தஞ்சை, கும்பகோணம் பகுதி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், நாகை, திருவாரூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவுக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். டெல்டா பகுதியைச் சுற்றி இன்று இரவுக்குள் மழை பெய்ய சாதகமான சூழல்கள் காணப்படுகின்றன.
சென்னையை பொறுத்தவரை நாளை மாலை அல்லது நாளை மறுநாள் மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.