ஃபீஞ்சல் புயல் கரையை கடந்ததா இல்லையா என்ற குழப்பம் தற்போது எழுந்துள்ளது. காரணம் வானிலை ஆய்வு மையம் புயல் கரையை கடந்துவிட்டதாகவும், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் புயல் இன்னும் கடலில்தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
அதாவது ஃபீஞ்சல் புயல் இன்னும் கரையை கடக்கவில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஆதாரங்களுடன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள சமூக வலைத்தள பதிவில், ஃபீஞ்சல் சூறாவளி இன்னும் கடலில்தான் உள்ளது. கரையைக் கடக்கவில்லை என்று தெரிவித்து செயற்கைக்கோள் படங்கள் சிலவற்றையும் அதில் இணைத்து இன்று மதியம் - மாலை வரை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்கள் தான் இன்றைய ஹாட் ஸ்பாட் என கூறிய அவர் ஃபீஞ்சல் புயல் இன்று மாலை வரை அங்கேயே இருக்கும் என கூறியுள்ளார்.
இந்த ஃபீஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இன்று பலத்த மழை விட்டு விட்டு பெய்யும் எனவும் சற்று நேரத்தில் புதுச்சேரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க 500 மிமீ மழை அளவைக் கடக்கும் என கூறியுள்ளார்.
காலை 7.15 மணி வரை விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் மைலம் AWS 504 மிமீ AWS 490 பதிவாகி உள்ளது. சற்று நேரத்தில் புதுச்சேரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க 500 மிமீ மழை அளவைக் கடக்கும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் ஃபீஞ்சல் புயல் கரையை கடந்தாலும், நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“