கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமான மழை பெற்று வந்தாலும், ஒரு சில இடங்களில் வெளியில் தாக்கம் தொடர்ந்து வருகிறது.
காலநிலை மாற்றம் அதிகரித்து வரும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடை வெளியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த தாக்கம் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்றாலும், மே மாதம் அக்னி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம். அதே சமயம் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதமே வெளியின் தாக்கம் அதிகரிப்பதால், பொதுமக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த கோடை வெளியின் தாக்கத்தின் போது, ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதன் காரணமாக பல இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு மக்களுக்கு அரசியல் கட்சியினர் உதவி செய்து வரும் நிலையில், சிக்னல்களில் பந்தல் கட்டி, போக்குவரத்தில் நிற்கும் பயணிகளுக்கும் அரசு சார்பில் உதவி செய்யப்பட்டது.
இதனிடையே கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததை தொடர்ந்து, ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டது. கனமழை காரணமாக குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரித்திருந்தது. இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், ஒரு சில இடங்களில் சூரியன் சுட்டெரித்து வருவது தொடர்ந்து வருகிறது.
அதன்படி சென்னையில், விமான நிலையம் பகுதியில், 4.1 செல்சியஸ் வரை அதிகரித்து இயல்பை விட அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு பகுதியில் 38.4 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னை நுங்கம்பாக்கம், கடலூர், மதுரை ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில், இயல்பை விட கணிசமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் மிகவும் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் சென்னை, நீலகிரி, நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பை விட வெப்பநிலை குறைவாக பதிவாகியுள்ளது.
தென் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஒரு வாரத்திற்கு, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் லேசானது முதல் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“