வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற்ற வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தாலும், சென்னை – பாண்டி பெல்ட்டில் விரைவில் மழை தொடங்கும் என்றும், இந்த மழை இன்று மாலை இரவு நேரத்தில் தீவரமாக அதிகரிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை (KTCC ) - பாண்டி பெல்ட்டில் மழை விரைவில் தொடங்கும். இன்று மாலை மாலை / இரவு நேரத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்கும். அதே நிலையில், மற்ற வேறு எங்கும் மழை பெய்யவில்லை என்பதை நினைவில் கொள்க. தற்போது உருவாகி இருக்கும் சூறாவளி சென்னை) முதல் பாண்டி பெல்ட் வரை மிக மிக கனமழையைக் கொடுக்கப் போகிறது.
இதனால் நாளை (சனிக்கிழமை) மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதே சமயம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த மழை நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதுக்கு மேல சொன்னா, ஹைப் கிபேனு ஒரு கூட்டம் வரும். இந்த நாட்டில் நல்லது சொன்னாலும் யோசிச்சு தான் சொல்லனும் போல. கடந்த 10 வருடங்களாக என்னைப் பார்த்த மற்றும் என்னை உண்மையாக பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் மட்டுமே இந்த தகவல். மற்றவர்கள் புறக்கணிக்கலாம்.
இந்த சூறாவளி காரணமாக நாளை பாண்டி முதல் சென்னை பெல்ட் வரை பலத்த மழை பெய்யும். எனவே, விழிப்புடன் இருங்கள். நேற்று இரவு ஒரு சிறிய மேகம் 50-60 மிமீ மழையை கொடுத்தது. இந்த சூறாவளி குறித்த எனது கணிப்புகள், சீராக இருந்தன என்று நான் எனது நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த சூறாவளி பற்றிநான் சரியாகப் புரிந்து கொண்டேன் அல்லது இல்லை என்று பெருமையுடன் காட்டுவதற்காக அல்ல.
உண்மையைச் சொல்வதென்றால், இந்த சூறாவளியை பற்றி விளக்கமாக தெரிந்துகொள்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது, மேலும் எனது சிறந்த மாதிரி விளக்கத் திறன்கள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், சில நபர்களின் தொடர்ச்சியான ஆய்வுக்குப் பிறகும் நான் அதை பற்றி தெரிந்துகொண்டேன். எனது கணிப்பு எப்படி வெளிப்படுகிறது என்று பார்க்கலாம். சென்னையில், நல்ல மழையைப் பார்க்கும் மகிழ்ச்சி இந்த மோசமான விமர்சனங்கள் அனைத்தையும் மறக்கச் செய்யும் என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“