தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
”தென்கிழக்கு வங்கக்கடலில் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதனால் அப்பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகக்கூடும். இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும்.
வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில், மே 9, 10, 11 தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, முன்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 11ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 7டிகிரி வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை முதல் மிதமான மழைப் பெய்யக்கூடும்.
நேற்று பெய்ந்த மழையின் அளவுபடி, அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆகிய இடங்களில் தலா 9 செண்டி மீட்டர் மழையும், விழுப்புரம் மாவட்டம் மூகையூர், மதுரை தல்லாகுளத்தில் தலா 8 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென் கிழக்கு வழங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டி அந்தமான் கடல் பகுதியில் வரும் 11-ம் தேதி அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகத்தி சுறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“