scorecardresearch

மோசடி புகார் மீது நடவடிக்கை இல்லை :கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டா எம்பிபிஎஸ், சீட் வாங்கி தருவதாக கூறி 23 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

Coimbatore
கோயம்புத்தூர்

மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக 23 லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் தனசெல்வன்  இவர் சென்னை மத்திய தூல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று உள்ளார். இவரது மனைவி விமலா இவர்களது மகனுக்கு சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டா எம்பிபிஎஸ், சீட் வாங்கி தருவதாக கூறி கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்எல்ஆர் டூட்டி பெய்டு ஷாப் நடத்தி வந்த பிர்தோஸ் சலாவுதீன் என்பவர் கடந்த  2019 ஆம் ஆண்டு  23 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளார்.

ஆனால் மருத்துவ படிப்பு  சீட்டு வாங்கித் தராமல் வெகு நாட்களாக அலைக்கழித்து ஏமாற்றியதாகவும், தனசெல்வம் விமலா தம்பதி ராமநாதபுரம் காவல் நிலையம், ஐஜி அலுவலகம்,ஆணையாளர் அலுவலகம், முதலமைச்சர் செல் பிரிவு,மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காநல்லூர் காவல் நிலையம் என அனைத்திலும் தொடர்ந்து மூன்று வருடங்களாக புகார்  கொடுத்துள்ளார். புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனவேதனை அடைந்த விமலா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி மேற்கொண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவர் மீது நீரை ஊற்றி காப்பாற்றினர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட. பெண்ணை காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu woman tried to set fire to coimbatore collector office premises

Best of Express