Advertisment

இந்தியாவிலேயே சாதி - மதமற்ற சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் பெண்

பள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே சாதி மதமற்ற சான்றிதழ் பெற விண்ணப்பித்து, நீண்ட காலம் போராடி வந்த சிநேகா, தற்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவிலேயே சாதி - மதமற்ற சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் பெண்

சாதி மதமற்ற சான்றிதழை இந்தியாவிலேயே முதன் முதலாக சிநேகா எனும் தமிழக பெண் வாங்கியிருக்கிறார்.

Advertisment

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சிநேகா. சின்ன வயதிலிருந்தே சாதி - மதத்தின் மீது நம்பிக்கையற்ற சிநேகா, சடங்குகளின்றி பார்த்திப ராஜா என்பவரை திருமணமும் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள்.

பள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே சாதி மதமற்ற சான்றிதழ் பெற விண்ணப்பித்து, நீண்ட காலம் போராடி வந்த சிநேகா, தற்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதன்மூலம் இந்தியாவிலேயே சாதி மதமற்ற சான்றிதழ் பெற்றவர் என்ற பெருமைக்கும் உரித்தாகியிருக்கிறார்.

No Caste No Religious Certificate

“குழந்தைகளிடம் சாதி மதம் பற்றிய எண்ணத்தை விதைக்காமல், சமூக நீதியுடன் வளரும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்” எனும் சிநேகாவுக்கு, மக்கள் நீதி மய்யத்தில் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Tamilnadu Vellore Thirupathur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment