சாதி மதமற்ற சான்றிதழை இந்தியாவிலேயே முதன் முதலாக சிநேகா எனும் தமிழக பெண் வாங்கியிருக்கிறார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சிநேகா. சின்ன வயதிலிருந்தே சாதி - மதத்தின் மீது நம்பிக்கையற்ற சிநேகா, சடங்குகளின்றி பார்த்திப ராஜா என்பவரை திருமணமும் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள்.
பள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே சாதி மதமற்ற சான்றிதழ் பெற விண்ணப்பித்து, நீண்ட காலம் போராடி வந்த சிநேகா, தற்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதன்மூலம் இந்தியாவிலேயே சாதி மதமற்ற சான்றிதழ் பெற்றவர் என்ற பெருமைக்கும் உரித்தாகியிருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/7a382121-a264-4fc8-8078-73a7c05814cc.jpg)
“குழந்தைகளிடம் சாதி மதம் பற்றிய எண்ணத்தை விதைக்காமல், சமூக நீதியுடன் வளரும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்” எனும் சிநேகாவுக்கு, மக்கள் நீதி மய்யத்தில் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.