பி.ரஹ்மான்.கோவை
கோவை அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் தன் உடைகளை கிழித்து அடித்து துன்புறுத்தியதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கோவை காந்திமா நகர் ஹட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகவள்ளி. இவருடைய தாயார் வீட்டில் வசித்து வருகிறார் இவருக்கு கை கால் வீக்கம் உட்பட பல்வேறு உடல் பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார். இந்த பிரச்சனை மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கடந் ஒரு வருட காலமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் அவ்வப்போது உடல் நல பிரச்சனை காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த கற்பகவள்ளி, சில சமயங்களில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்ல முடியாத சூழலில் அங்கே இரவு தங்கி விட்டு மறுநாள் வீடு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல சிகிச்சைக்காக வந்த கற்பகவல்லி நேற்று இரவு அங்கேயே தங்கி உள்ளார்.
அப்போது மருத்துவமனையில் இரவு நேரத்தில் பணியாற்றும் காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கற்பகவள்ளியை உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். இதற்கு கற்பகவள்ளி மறுக்கவே அங்கு பணியில் இருந்த காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கற்பகவள்ளியை அடித்தும் அவரது ஆடைகளை கிழித்து எறிந்தும் அவருடைய உடைமைகளை வெளியே தூக்கி எறிந்து பிரச்சனை செய்துள்ளனர் என கூறப்படுகின்றது.
இது குறித்து கற்பகவள்ளி அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் முறையிட்டுள்ளார் ஆனால் போலீசாரும் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு அவரை நிர்பந்தித்துள்ளனர். மேலும் அங்கு பணியில் இருந்த மற்றொரு போலீஸ் உடனடியாக வெளியே செல்ல வேண்டும் இல்லை என்றால் அடித்து வெளியே தூக்கி எறிந்து விடுவோம் என்று மிரட்டும் தோணியில் சத்தமாக பேசியுள்ளார். இதனால் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய கற்பகவல்லி சாலை ஓரத்தில் இரவு நேரத்தை கழித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் நடந்த சம்பவம் தொடர்பாக கற்பகவள்ளி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து கற்பகவல்லி கூறுகையில் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் தங்கும் பெண்களை இவர்கள் இதேபோன்றுதான் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வருகின்றனர். மேலும் எங்களது உடைமைகளையும் பறித்துக் கொள்கின்றார். அதில் பணம் நகைகள் இருந்தாலும் அதனையும் எடுத்துக் கொள்கின்றனர்.
எங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் அரசு மருத்துவமனையில் கிடையாது எங்களை அடிப்பதற்கு இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது. சிகிச்சைக்காக வரும் நபர்களை இப்படித்தான் இவர்கள் நடத்துவார்களா? இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரம் கண்டு கொள்ளவில்லை. எனவே தான் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil