Tamilnadu News Update : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோனத்தில் பிரசவ வலியால் துடித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் காவலர்களின் உதவியின் மூலம் குழந்தை பிறந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Advertisment
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சுகுணா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் பொற்றாமரைக் குளத்தின் கிழக்குப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, 30 வயதிற்கு இடைப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனை கண்ட காவலர் சுகுணா உடனடியாக சக காவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வநத சக பெண் காவலர்கள் பிரசவ வலியால் துடித்த பெண்னை காப்பாற்றியுள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கும்பகோணம் மேற்கு இன்ஸ்பெக்டர் பேபி கூறுகையில், சுகுணாவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தவுடன் நாங்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றோம். அப்போது அந்தப் பெண் ஒரு பெரிய நைட்டியை அணிந்திருந்ததாள். அவள் கர்ப்பமாக இருப்பதை நாங்கள் உடனடியாக உணரவில்லை. ஆனால் அவருக்கு அதிகப்படியான இரத்தபோக்கு இருந்ததால், நாங்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தோம். அதன்பிறகு எங்களது காவல் நிலைய அதிகாரிகளை அழைத்து புடவைகள் மற்றும் துண்டுகளை எடுத்து வர சொன்னேன்.
அதன்பிறகு அப்பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளிகள் சிலரின் உதவியுடன் நாங்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வளைத்தோம். பெண் தொழிலாளர்களும் தண்ணீர் கொடுத்து அந்த பகுதியை சுத்தம் செய்தனர். இதனால் ஆம்புலன்ஸ் அங்கு வருவதற்கு முன்பே நாங்கள் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தோம். அதன்பிறகு தாயும் சேயும், கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தோம், ”என்று கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இந்நிலையில் துரிதமாக செயல்பட்டு இரண்டு உயிர்களை காப்பாற்றிய பெண் காவலர் குழுவுக்கு தஞ்சாவூர் ரேஞ்ச் டிஐஜி பிரவேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார். சுகுணா, தலைமை காவலர் சரிதா மற்றும் இன்ஸ்பெக்டர் பேபி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் அதிகார வரம்பில் சம்பவம் நடக்கவில்லை என்றாலும் விரைவாக செயல்பட்டதற்கான பாராட்டுக்களையும் நற்சான்றிதழ்கள் பெற்றனர். அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரிடமிருந்து போலீஸால் அதிக தகவல்களைச் பெற முடியவில்லை.
ஆனால் அந்த பெண்ணை கருத்தரித்ததற்கு காரணமாக இருந்ததாக ஜான் (45) என்ற தினக்கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு காவலர் குழு தெருவில் பிரசவம் பார்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil