பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறையால் செய்யப்பட்ட நிலையில், அவர் தங்கிய அறையில் கஞ்சா இருந்ததாக காவல்துறையினர் அதனைக் கைப்பற்றி தேனி போலீசார் ஒரு வழக்கை அவர் மீது பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட சிறப்புப் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் மீது இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்றத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து ஜாமீன் வழக்கக் கோரி சவுக்கு சங்கர் தரப்பில் நீதிமன்றத்தை நாடியது. இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, ஜாமீன் வழங்கி கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவு வழங்கியது
இதனையடுத்து மதுரை மத்தியச் சிறையிலிருந்து வெளியில் வந்த சவுக்கு சங்கர் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துக்களை யூடியூப் சமூக வலைத்தளத்தில் பேசி வந்தார். இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் மதுரை மாவட்ட சிறப்புப் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நேற்று இரவு காவல்துறை பாதுகாப்புடன் தேனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள சிறப்புப் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜர் செய்யப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“