கரூர் துயர சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தி.மு.க முயற்சி; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

கரூரில் 41 பேர் இறந்தபோதும் அதற்கு சம்மந்தப்பட்டவர்களை காப்பாற்றவே முயற்சி செய்தார்கள். அதே போல கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திலும் அதற்கு தொடர்புடையவர்களை காப்பாற்றவே இந்த அரசு முயற்சி செய்தது.

கரூரில் 41 பேர் இறந்தபோதும் அதற்கு சம்மந்தப்பட்டவர்களை காப்பாற்றவே முயற்சி செய்தார்கள். அதே போல கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திலும் அதற்கு தொடர்புடையவர்களை காப்பாற்றவே இந்த அரசு முயற்சி செய்தது.

author-image
WebDesk
New Update
Nainarna

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு முன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

Advertisment

அப்போது பேசிய அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அங்கம் வகிக்கிறது. அவர்கள் கட்சி பிரச்சனையில் நான் எந்த கருத்தும் கூற முடியாது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிலர் அதிகமான தொகுதிகளை கேட்கிறார்கள், சிலர் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அது வேறு விஷயம். எங்களுக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். 

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமான அமைப்புக்கள் அவற்றுக்கும் பா.ஜ.க விற்கும் எந்த சம்மதமும் கிடையாது. ஆளுங்கட்சியாக தி.மு.க இருக்கும்போது அவர்கள் அமைச்சருக்கு எதிராகவே எப்படி வழக்கு பதிவு செய்வார்கள். கரூரில் 41 பேர் இறந்தபோதும் அதற்கு சம்மந்தப்பட்டவர்களை காப்பாற்றவே முயற்சி செய்தார்கள். அதே போல கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திலும் அதற்கு தொடர்புடையவர்களை காப்பாற்றவே இந்த அரசு முயற்சி செய்தது.

தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதாக திமுகவினர் திரும்பத் திரும்ப பொய் கூறி வருகிறார்கள். பீகார் மக்களை வந்தேறிகள் என்றும் பாணி பூரி விற்பதற்காக வந்துள்ளார்கள் என்றும் முதல்வர், அமைச்சர்களே பேசி உள்ளார்கள். தி.மு.க.வினர் இவ்வாறு பேசியதாக பிரதமர் பேசியதை திமுகவினர் மடைமாற்றி வருகிறார்கள். மொழி வாரியாக மாநிலத்தை பிரித்தாலும் சூழ்ச்சியை திமுக தொடங்கியுள்ளது. மக்கள் இதை புரிந்து கொள்வார்கள் மக்கள் மனமாற்றத்திற்கு தயாராக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

க.சண்முகவடிவேல்

Nainar Nagendran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: