காவல்துறை தரப்பில் எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் த.வெ.க. சார்பில் பதில் அளிக்கப்பட்ட நிலையில், மதுரையில் நடைபெறும் 2-வது மாநாட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, 2-வது மாநில மாநாடு மதுரையில் வரும் 25-ந்தேதி நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தேதியை மாற்றுமாறு போலீசார் கேட்டுக்கொண்டதால், விஜய் மாநாட்டை ஆகஸ்ட் 21-ந்தேதி நடத்துவதாக அறிவித்தார்.
புதிய தேதியில் மாநாடு நடத்துவதற்கான மனுவை, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில், கடந்த 5-ந்தேதி திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசுல் நாகரிடம் அளித்தனர். அப்போது, மாநாட்டின் இடம், பங்கேற்பாளர் எண்ணிக்கை, குடிநீர், உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட 42 அம்சங்களை போலீசார் கேள்வி எழுப்பினர்.
போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும், த.வெ.க. தரப்பில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் நடைபெறும் 2-வது மாநில மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாக புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.