கோவை மாநகராட்சி 7-வது வார்டைச் சேர்ந்த பாக்கியலட்சுமி இன்று அவிநாசி சாலை ராமலட்சுமி மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு புகார் மனு ஒன்றை அளித்தார். விண்ணப்பித்த உடனே, அவருக்கான வீட்டு வரி பெயர் மாற்ற ஆணையும் புதிய குடிநீர் இணைப்புக்கான ஆணையும் உடனடியாக வழங்கப்பட்டது.
இதை அடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் அலைபேசி வீடியோ வாயிலாக நேரடியாக பேசிய பாக்கியலட்சுமி, அவரின் உடல்நலத்தை விசாரித்து தனது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார். முதலமைச்சரின் திறன் மற்றும் மக்கள் நலனுக்காக செயல்படும் செயல் திட்டங்களை பாராட்டிய திருமதி பாக்கியலட்சுமி, இம்மாதிரியான முகாம்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.