Tamilnadu School Education +2 Exam : தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தவினால் பள்ளிகளுக்காக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இதனால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, பாமக, பாஜக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் காணொலி காட்சி வாயிலாக கருத்து கேட்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து திமுக, காங்கிரஸ், விசிக, மமக, மதிமுக, கோ.ம.தே.க,தமிழக வாழ்வுரிமை கட்சிகள் ஆதுரவு தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் 12 பொதுத்தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பெரும்பான்மை கட்சிகளின் நிலைபாளே தங்களின் நிலைபாடு என்று அதிமுக சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா என்பது குறித்து குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில், இறுதி முடிவை அரசே எடுக்கும் என்றும் கூறப்பட்டிருந்த்து. இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் தான் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil