Advertisment

Tamil News Today : ஜெயலலிதா இறந்த தேதியில் எந்த குழப்பமும் இல்லை - டிடிவி தினகரன்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil news

TTV தினகரன்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை நாளை வரை நடைபெறும். சட்டப்பேரவையில் இன்று துணைநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. கூடுதல் செலவினத்திற்கான வரவு-செலவு அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சர்வதேச காவல்துறை மாநாடு

இண்டல்போல் பொதுச்சபை கூட்டம் டெல்லியில் தொடங்குகிறது. 195 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சர்வதேச காவல்துறை மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அன்டோனியோ குட்டரெஸ் இந்தியா வருகை

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இன்று டெல்லி வருகிறார். வரும் 20-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:16 (IST) 18 Oct 2022
    ஜெயலலிதா இறந்த தேதியில் எந்த குழப்பமும் இல்லை - டிடிவி தினகரன்

    அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்: “ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான். மக்கள் வரிப்பணத்தை வீணாக்க, அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது இந்த ஆணையம். எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்தையே ஆணையம் நிராகரித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சைகளை எழுப்பியதே திமுக தான். ஜெயலலிதா இறந்த தேதியில் எந்த குழப்பமும் இல்லை. அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குற்றச்சாட்டுகள் எதிர்கொள்ளப்படும்.” என்று கூறியுள்ளார்.



  • 19:54 (IST) 18 Oct 2022
    ஜெயலலிதா குறித்த வதந்திகளை பரப்பியதே தி.மு.க தான் - டி.டி.வி. தினகரன் காட்டம்

    அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்: “ஜெயலலிதா குறித்த வதந்திகளை பரப்பியதே திமுக தான். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதுதான் நான் பார்த்தேன். ஜெயலலிதா இறந்த தேதியில் எந்த குழப்பமும் இல்லை.ஆணையம் அதன் அறிக்கைகள் அனைத்துமே அரசியல்தான்” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:58 (IST) 18 Oct 2022
    தெலங்கானா: பாஜக கவுன்சிலர் காரில் ரூ.1 கோடி பறிமுதல்

    தெலங்கானாவில் பாஜக கவுன்சிலர் காரில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியுள்ளது.

    இந்தப் பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட வைக்கப்பட்டிருந்தது என மற்ற கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.



  • 18:47 (IST) 18 Oct 2022
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி. ராஜா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



  • 18:32 (IST) 18 Oct 2022
    ஒபிஎஸ் பதவியேற்பு தற்செயலானது அல்ல- ஆணையம்

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ள ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்பது தற்செயலானது அல்ல” எனத் தெரிவித்துள்ளது.



  • 18:11 (IST) 18 Oct 2022
    வைகையில் வெள்ளப் பெருக்கு: 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • 17:48 (IST) 18 Oct 2022
    ஆதீன மடங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு.. உயர் நீதிமன்ற மதுரை கிளை!

    தவறு இழைக்கும் ஆதீன மடங்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.



  • 17:33 (IST) 18 Oct 2022
    அதிமுகவினர் மீது நடவடிக்கை- துரைமுருகன்

    சடடப்பேரவையில் கூச்சல் குழப்பம் செய்த அதிமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.



  • 17:23 (IST) 18 Oct 2022
    வடகிழக்கு டெல்லி கலவரம்.. உமர் காலித்துக்கு ஜாமின் மறுப்பு

    வடகிழக்கு டெல்லி கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட உமர் காலித்துக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.



  • 17:09 (IST) 18 Oct 2022
    காஷ்மீரில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.



  • 16:57 (IST) 18 Oct 2022
    இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளி கொண்டாட்டம்

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளியை கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையில் அமைந்திருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது.



  • 16:42 (IST) 18 Oct 2022
    ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் இறுதியில் இடம்பெற்ற திருக்குறள்

    ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் இறுதியில் திருக்குறள் ஒன்று இடம்பெற்றுள்ளது

    காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

    வேலாள் முகத்த களிறு - திருக்குறள்

    பொருள் : வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும் - மு. வரதராசன்



  • 16:41 (IST) 18 Oct 2022
    ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் இறுதியில் இடம்பெற்ற திருக்குறள்

    ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் இறுதியில் திருக்குறள் ஒன்று இடம்பெற்றுள்ளது

    காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

    வேலாள் முகத்த களிறு - திருக்குறள்

    பொருள் : வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும் - மு. வரதராசன்



  • 16:16 (IST) 18 Oct 2022
    கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்

    கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த பிரேம்குமார், கலா மற்றும் சுஜாதா ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது



  • 16:06 (IST) 18 Oct 2022
    டி20 உலக கோப்பை; யூ.ஏ.இ வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்

    ஐசிசி டி20 உலக கோப்பையில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் யூ.ஏ.இ வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். கார்த்திக் மெய்யப்பன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது



  • 15:49 (IST) 18 Oct 2022
    அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவி கேமிராக்கள் அகற்றம் ஏன்? ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை

    அப்பல்லோ மருத்துவமனையில் அரசு மற்றும் காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது



  • 15:35 (IST) 18 Oct 2022
    பி.சி.சி.ஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக ரோஜர் பின்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்



  • 15:19 (IST) 18 Oct 2022
    ஆவின் இனிப்பு வகைகளில் டால்டாவை பயன்படுத்துவதில்லை - நிர்வாகம் விளக்கம்

    ஆவின் இனிப்பு வகைகளில் நெய்க்கு பதிலாக டால்டாவை பயன்படுத்துவதாக நாளிதழில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. ஆவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது



  • 15:14 (IST) 18 Oct 2022
    உயிரிழப்போ, படுகாயங்களோ ஏற்படும் என தெரிந்துதான் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் - அறிக்கையில் தகவல்

    உயிரிழப்போ, படுகாயங்களோ ஏற்படும் என நன்கு தெரிந்துதான் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • 14:54 (IST) 18 Oct 2022
    மும்பை பங்குச்சந்தை நிலவரம்

    மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 504 புள்ளிகள் அதிகரித்து 58,915 ஆகவும்,தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 158 புள்ளிகள் அதிகரித்து 17,470 ஆகவும் உள்ளது.



  • 14:12 (IST) 18 Oct 2022
    நெதர்லாந்து அணி வெற்றி

    டி 20 உலகக்கோப்பை முதல் சுற்றில் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நமீபியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி, 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.



  • 13:23 (IST) 18 Oct 2022
    இ.பி.எஸ் தலைமையில் நாளை போராட்டம்

    எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது



  • 12:42 (IST) 18 Oct 2022
    ஜெயலலிதா இறந்த நேரம் இதுதான்

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த நேரம் 5.12.2016 அன்று இரவு 11.30 மணி என மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டுள்ளது . சாட்சியங்களின் அடிப்படையில் 4.12.2016 அன்று மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் ஜெயலலிதா இறந்திருக்கலாம்



  • 12:40 (IST) 18 Oct 2022
    அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்

    இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்



  • 12:40 (IST) 18 Oct 2022
    அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்

    இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்



  • 11:44 (IST) 18 Oct 2022
    துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் பரிந்துரை

    துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை. இறந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் .



  • 11:31 (IST) 18 Oct 2022
    முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்

    சசிகலா, கே.எஸ்.சிவக்குமார், ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்



  • 10:58 (IST) 18 Oct 2022
    ஈபிஎஸ் தரப்பினர் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள தடை

    ஈபிஎஸ் தரப்பினர் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் இன்று ஒரு நாள் கலந்து கொள்ள தடை - சபாநாயகர்

    2 நாள் தடை விதிப்பதாக சபாநாயகர் அறிவித்த நிலையில், ஒரு நாளாக குறைக்க அவை முன்னவர் துரைமுருகன் கோரிக்கை

    இதையடுத்து, இன்று ஒரு நாள் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள தடை



  • 10:51 (IST) 18 Oct 2022
    சபை மரபுப்படியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன - அப்பாவு

    சபை மரபுப்படியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    எதிர்க்கட்சி துணைத் தலைவரை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை

    அலுவல் ஆய்வு குழு உறுப்பினர் நியமனத்தில் சபாநாயகருக்கே முழு அதிகாரம் உள்ளது - சபாநாயகர் அப்பாவு



  • 10:50 (IST) 18 Oct 2022
    எதிர்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி - அப்பாவு

    எதிர்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி

    விதிப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியே இல்லை

    எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம்



  • 10:49 (IST) 18 Oct 2022
    ஈபிஎஸ் தரப்பு அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு

    ஈபிஎஸ் தரப்பு அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு

    தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டிருந்த நிலையில், அவைக்காவலர்களுக்கு உத்தரவு

    சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணா



  • 10:02 (IST) 18 Oct 2022
    சட்டப்பேரவையில் கலந்து கொள்ள ஓபிஎஸ் புறப்பட்டார்

    சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு வந்தார்.



  • 10:00 (IST) 18 Oct 2022
    மழைக்கால கூட்டத்தொடர்: எடப்பாடி பழனிசாமி பேரவை வருகை

    மழைக்கால கூட்டத்தொடர், தமிழ்நாடு சட்டப்பேரவை 2வது நாளாக இன்று கூடுகிறது

    எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவை வருகை

    அதிமுக உறுப்பினர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜு, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் வருகை



  • 09:58 (IST) 18 Oct 2022
    அப்பாவு உடன் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

    சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக வலியுறுத்தி வருகின்றனர்



  • 08:53 (IST) 18 Oct 2022
    கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 08:12 (IST) 18 Oct 2022
    வண்டலூர் - மீஞ்சூர் சாலையில் கார் விபத்து - 3 பேர் பலி

    சென்னை, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, 2 பேர் காயம்

    மலையம்பாக்கம் அருகே கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற கார், சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.



  • 08:06 (IST) 18 Oct 2022
    பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 வெளிமாநில தொழிலாளர்கள் சுட்டுக்கொலை

    தெற்கு காஷ்மீர் ஷோபியானில் நேற்று இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வெளிமாநில தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேச கனூஜ் பகுதியைச் சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் என அடையாளம் காணப்பட்டனர்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment