scorecardresearch

மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா? தமிமுன் அன்சாரி விளக்கம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக, 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Tamimun Ansari gave an explanation on the matter of his removal from the Manithaneya Jananayaga katchi
முன்னாள் எம்.எல்.ஏ.வும் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரி

திண்டுக்கல்லில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில், 32 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து செயல்பட்டு வரும் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரியை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வட மாநிலத்தவரின் வருகையை கண்காணித்து முறைப்படுத்தத் கோரியும், பிபிசி நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை நடத்த உத்தரவிட்ட மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிமுன் அன்சாரி, “கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டதாக சில ஊடகங்களில் இருந்து செய்திகள் வெளியாகின.
இதில் உண்மை இல்லை. நான்தான் கட்சியின் தலைவர். கட்சி என் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

கடந்த காலங்களில் இருந்தே அவர்கள் கட்சிக்கு முரண்பாடாக செயல்பட்டுவருகின்றனர். நான் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி என்றேன்.
அவர்கள் அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வேண்டும் என்றார். எனக்கு தொகுதி கிடைக்கவில்லை என்பது முக்கியமல்ல.
கொள்கை தான் முக்கியம். எங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யாவிட்டாலும் நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தொடர்வோம்” என்றார்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்ற கேள்விக்கு, “அந்தக் கேள்விக்கு பழ. நெடுமாறன்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamimun ansari gave an explanation on the matter of his removal from the manithaneya jananayaga katchi

Best of Express