Thamimun Ansari meets Raghupathi in Pudukottai: திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுவிப்போம் என வாக்குறுதி அளித்தது.
இந்த வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டிருந்தன. எனினும் குறிப்பிட்டப்படி இஸ்லாமிய சிறைவாசிகளை திமுக அரசு விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்னாள் எம்.எல்.ஏ தமிழுன் அன்சாரி நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் கடிதம் ஒன்று வழங்கினார்.
அந்தக் கடிதத்தில், “இஸ்லாமிய ஆயுள் சிறைவசிகள் பற்றி ஏதும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. சமூக வழக்குகள் தொடர்புடைய கைதிகள் உள்ளிட்ட பலரின் விடுதலையில் பாரப்பட்சம் காட்டப்படுகிறது என்ற கருத்தும் எழுந்துள்ளது.
இவர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையில் 161ஆவது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் .
இந்தத் தீர்மானத்தை ஆளுநர் மறுத்தாலும், அது சட்டப் போராட்டத்திற்கு பெரிதும் உதவிகரமாக அமையும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், “இதை வலியுறுத்தி அக்டோபர் 9 அன்று கூட விருக்கும் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுக்கு மத்தியில் ஒரு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பரிந்துரைக்க வேண்டும்” எனவும் கோரியிருந்தார்.
இந்த நிலையில் இன்று புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதியை தமிழுன் அன்சாரி சந்தித்துப் பேசினார். அப்போது இஸ்லாமிய சிறை கைதிகள் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“