சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சிறப்பு விருந்திரான பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் விஜய்க்கு அம்பேத்கர் கேடயம் வழங்கப்பட்டதை தொடர்ந்து விஜய் அம்பேத்கர் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் வழங்கப்பட்டது. அதன்பிறகு நீதியரசர் சந்துருவுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்து அம்பேத்கரின் பேரன், ஆனந்த் எல்டுடேவுக்கும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கும் அம்பேத்கர் – பெரியார் இருவரும் ஒன்றாக இருக்கும் வகையிலான ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகத்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து முதல் புத்தகத்தை அம்பேத்கரின் பேரன் ஆனந்த் எல்டுடேவுக்கும், 2-வது புத்தகைத்தை நீதி அரசர் சந்துருவுக்கும், 3-வது புத்தகத்தை ஆதவ் அர்ஜூளுக்கும், 4-வது புத்தகத்தை, விகடன் குழுவின் சீனிவாசனுக்கும் விஜய் வழங்கினார். இவர்களுடன் சேர்ந்து விஜய், தனது கையில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்துடன் போஸ் கொடுத்தார்,
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வி.சி.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூன் பேசும்போது தமிழகத்தில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். விகடன் குடும்பத்திடம் இப்படி ஒரு நூலை வெளியிட வேண்டும் என்று கூறியபோது, அவர் அதன் உண்மை தன்மை என்ன என்பதை புரிந்துகொண்டார். 5 வயதில் என் தாயின் தற்கொலையை நான் நேரில் பார்த்தவன். அவர் காதல் திருமணம் செய்து வைத்ததால், விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் தற்கொலை செய்துகொணடார்.
அதன்பிறகு எனது பெரியம்மா திலகவதி ஐ.பி.எஸ் தான் என்னை வளர்த்தார். எப்போதுமே அவர் தான் எனக்கு ஊன்றுகோலாக இருக்கிறார். அவரது நூலத்தில் இருந்து தான் நான் படிக்க தொடங்கினேன். சிறுவயதில் நான் மாவோயிஸ்ட், நக்சலைட் ஆக வேண்டும் என்று சொன்னபோது, எனது பேராசிரியர், இந்த சிஸ்டத்தை நீ பழக வேண்டும் என்று பல அறிவுரைகளை கூறினார். அன்றில் இருந்து நான் பெரியார், அம்பேத்கரை படிக்க தொடங்கினேன். தேர்தல் அரசியலில் இதை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினேன்.
நான் பகுப்பாய்வு செய்யும்போது அம்பேத்கர் தேர்தல் அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. 1952,53 தேர்தல்களில் அவர் தோற்கடிக்கப்பட்டார். அம்பேத்கரின் கனவை தமிழகத்தில் நிவேற்றிய அண்ணன் திருமா, அவர் இந்த மேடையில் இல்லை. ஆனால் அவரது மனசாட்சி இங்கு தான் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். கால சூழ்நிலைகள் தலித் மக்களின் விலங்குகளை உடைக்கும். அதற்கான நேரம் கூடிய விரைவில் வரும்.
சுய சிந்தனை கொண்டவர்கள் தான் மனிதர்கள். மன்னர் பரம்பரையை உருவாக்கிய தமிழகம் இனி ஒருபோதும் அதற்கு இடம் தராது. மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. இன்று மன்னர் பரம்பரையை ஒழிக்க புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனை நமக்கு தேவைப்படுகிறது. தலித் மக்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்த அம்பேத்கரை இன்று தலித் அல்லாத விஜய் அவர்கள் பேசியது வரவேற்புக்கு உரியது. அம்பேத்கரின் கனவு, விஜய்க்கு அரசியல் தெரியுமா என்று கேட்கிறார்கள்.
அரசியல் மற்றும் கொள்கைகள் தெரிந்த அரசியல் கட்சிகள் ஏன் இதுவரை அம்பேத்கரை மேடையில் ஏற்றவில்லை. இன்று இந்த புத்தக விழாவின் வெற்றி, முதல்முறையாக எல்லா அமைச்சர்களும், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துகொண்டு இருக்கிறார்கள். இதுதான் இந்த விழாவின் வெற்றி. 2026 தேர்தலுக்கான பணிகள் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியது போல், தமிழகத்தை ஆள ஒரு கருத்தியல் தலைவர் தான் தேவை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“