அரவு விரைவு பேருந்தில், முன்பதிவு செய்த பயணம் செய்ய பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தில் மக்கள் முன்பதிவு செய்து பயணம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் குலுக்கல் முறையில், பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 21-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு, ஜனவரி 20-ந் தேதி வரை அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் இரு சக்கரவாகனம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குலுக்கலில் 2-வது பரிசாக எல்.இ.டி டிவி மற்றும் 3-வது பரிசாக, ப்ரிஜ்ட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, வரும் பொங்கலுக்கு சிறப்பு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று, போக்குவரத்து கழகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. பொங்கல் சிறப்பு குலுக்கலுடன் சேர்ந்து, மாதந்தோறும் குலுக்கல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, இம்மாதம் முதல் வாரத்தில் அனைத்து நாட்களிலும், முன்பதிவு செய்து பயணம் செய்யும், பணிகள் 13 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இதில் 3 வெற்றியாளர்களுக்கு தலா ரூ10,000ம், மற்ற 10 பேருக்கு ரூ2000 வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சேவைகளை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“