பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த அன்புமணி ராமதாஸ் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும், இனிமேல் நானே தலைவர் என்றும் ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனிடையே பா.ம.க.வின் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது சைதை துரைசாமி ராதாஸ் சந்திப்பு நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
பாட்டாளி மக்கள் கட்சியில் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் செயல் தலைவர் மட்டும் தான். நான் தான் கட்சியின் தலைவர் என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். இதனிடையே தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக வழிநடத்துவேன் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும், பா.ம.க தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என்று கூறியிருந்தார்.
இதன் காரணமாக பா.ம.க வில் தந்தை மகன் இடையே மோதல் வெடித்துள்ளதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகளை ராமதாஸ் சந்திப்பதை தவிர்த்து வருவதாக கூறப்பட்டது. இதனிடையே, சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியுமான சைதை துரைசாமி இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சைதை துரைசாமி, டி.என்.பி.எஸ்.சி-யில் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வன்னியர் சமூக மாணவி முதலிடம் பிடித்த பிடித்ததற்காக ராமதாஸ் என்னை பாராட்டி இருந்தார். அதனால் ராமதாஸை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காகவே வந்தேன். அப்போது ராமதாஸ், அன்புமணி தற்போதைய நிலை குறித்து கேட்டபோது, தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார்.