complaint along with EB : மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என தமிழக மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மினசார வாரியம் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில், “மின் கட்டணம் கட்டவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனற குறுஞ்செய்தி பரவிவருகிறது.
இந்தக் குறுஞ்செய்தி வந்தால் பதற்றம் கொள்ள வேண்டாம். அவசரகதியில் மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். உங்கள் மின் கட்டணத்தை சரிபார்த்துவிட்டு, http://cybercrime.gov.in என்ற இணையதளம் அல்லது @tncybercrimeoff என்ற ட்விட்டர் பக்கத்திலும் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1930 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தத் தகவலை அனைவருக்கும் பகிர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து, இது குறித்து டான்ஜெட்கோ அதிகாரப்பூர்வ கணக்கில், “ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனம்!
1. பதட்டம் அடைய வேண்டாம்
2. உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்
3. அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்
4. இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்
5. உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும்
6. உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்
இது ஒரு மோசடி மெசேஜ்!” எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், போலி இணைய தள லிங்கை தொடும்போது பண இழப்பும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“