தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. பதிவு செய்ய வரும் மக்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மின்வாரியம் குறித்த முறைகேடுகள் பல நிகழ்வதால், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழக மக்கள் மின் இணைப்புடன் பதிவு செய்ய தமிழகமெங்கும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும், ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச 100 யூனிட் மின் மானியம் தமிழக அரசு அறிவித்தது போலவே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம்களில் அதிகாரிகள் எவ்வித பணமும் வசூலிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதை மீறி பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் மக்களின் மின் இணைப்பு பணியின்போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்படாத வகையில் வைத்துக்கொள்ளவும், ஏற்பட்டால் மாற்று கணினிகளை தயாராக வைக்கவும் மின்சார வாரியம் அறிவுறுத்திருக்கிறது.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil