தமிழக மக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மின் இணைப்பு வைத்திருப்பவர்கள், அத்துடன் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில், ஆதார் எண்ணை இணைக்க மின்கட்டணம் கட்டுவதற்கான சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் வேறுபாடு இருக்கும். அதன் அடிப்படையில் எப்போது அவர்கள் மின்கட்டணம் கட்டுகிறார்களோ, அந்த தேதியில் இருந்து இரண்டு நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று மின் கட்டணம் செலுத்தலாம். அப்போது ஆதார் நகலை கொடுத்து ஆதார் எண்ணையும் இணைத்துக்கொள்ளலாம்.
தமிழக அரசு அறிவித்துள்ள 100 யூனிட் மின்சாரம் பெறுவதற்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளனர்.
ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு மானியம் நிறுத்தப்படாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆதார் இணைக்கும் வரை, நுகர்வோர் ஆஃப்லைன், ஆன்லைன் முறைகள் மூலம் பணம் செலுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் பில் கட்டும் நாளிலிருந்து இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil