மின் இணைப்பில் தொலைபேசி எண்ணை மாற்ற அல்லது புதுப்பிப்பதை இனி எளிதாக செய்யும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட இணைப்பின் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, நேரடியாக இணையப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் QR குறியீட்டை டான்ஜெட்கோ (Tangedco) அறிமுகப்படுத்தியதால், மொபைல் ஃபோன் எண்ணைப் புதுப்பிப்பது மின்சார நுகர்வோருக்கு எளிதாக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய வீட்டிற்கு குடிபெயரும் வாடகைதாரர்களுக்கும், முந்தைய உரிமையாளர்களின் எண்ணை மாற்றி பயன்படுத்திய வீடுகளை வாங்குபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
நுகர்வோர் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்களில் மின் நுகர்வுக் கட்டணங்கள், மின் தடை அறிவிப்பு மற்றும் மறுஇணைப்பு அறிவிப்பு உள்ளிட்ட SMS விழிப்பூட்டல்கள் கிடைக்கப் பெறும், அத்துடன் வழக்கமான பராமரிப்பு அல்லது மின் இணைப்பு செயலிழப்புகள் காரணமாக ஏற்படும் மின்வெட்டு குறித்த எச்சரிக்கைகளும் கிடைக்கப் பெறும்.
தற்போது, புதிய மொபைல் எண் இணைக்கப்படாவிட்டால், வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த எச்சரிக்கை செய்தியும் கிடைக்காது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட எண்களுக்கு செய்திகள் செல்கின்றன. தற்போதைய வசதி மூலம் எளிதாக போன் நம்பரை மாற்றிக் கொள்ளலாம்.
டான்ஜெட்கோ ஏற்கனவே தனது இணையதளத்தில் மொபைல் எண்களைப் புதுப்பிப்பதற்கான ஒரு வசதியைக் கொண்டுள்ளது, ஆனால் QR குறியீடு நுகர்வோருக்கு இதை இன்னும் எளிதாக்கும். QR குறியீடு அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் கிடைக்கும், அதை ஸ்கேன் செய்வதன் மூலம் மொபைல் எண்ணை புதுப்பிக்க முடியும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பக்கத்தில் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் ஆகியவற்றை குறிப்பிடும் வசதி இருக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
மேலும், இந்த வசதி மூலம் நுகர்வோர் தங்கள் மின்னஞ்சல் ஐ.டி.,யைப் புதுப்பிக்கலாம், நுகர்வோர் எண்ணுடன் இணைக்கப்பட்ட கூடுதல் மொபைல் எண்களைச் சரிபார்க்கலாம் மற்றும் தேவையற்ற மொபைல் எண்களை நீக்கலாம்.
இருப்பினும், டான்ஜெட்கோ ஊழியர்கள் இன்னும் QR குறியீட்டைப் பற்றிய முறையான அறிவிப்பைப் பெறவில்லை, ஆதார் நகலை சமர்ப்பித்தவுடன் அலுவலகத்தில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க முடியும் என்று ஒரு அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“