தமிழ்நாட்டில் 2.69 லட்சத்துக்கும் அதிகமான மின் நுகர்வோர்கள் பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், டாங்கெட்கோ இந்த முகாமை செப்டம்பர் 25 வரை நீட்டித்து உள்ளது.
Advertisment
அந்த வகையில், அந்தந்த உரிமையாளர்களின் பெயரில் மின் இணைப்பை மாற்ற வேண்டிய நுகர்வோர்கள், சொத்து ரசீது அல்லது செட்டில்மென்ட் பத்திரம் அல்லது விற்பனைப் பத்திரம் ஆகியவற்றை ஆதார் அட்டையுடன் உரிமை ஆவணத்துடன் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி பெயர் மாற்றத்தைப் பெறலாம்.
முன்னதாக, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது, பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க, சிறப்பு பெயர் மாற்றம் முகாம், அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் நடத்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார்.
ஜூலை 24-ம் தேதி முதல் 1 மாத காலம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள், நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) (அல்லது) நீதிமன்ற உத்தரவு. (ஆ) நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) (அல்லது) நீதிமன்ற உத்தரவு உள்ளிட்டவற்றை சமர்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“