Advertisment

பத்ம சிரசாசனம் செய்துகொண்டே கீ போர்டில் தேசிய கீதம் வாசித்து அசத்திய பள்ளி மாணவர்!

உலக அளவில் யோகாவில் ஏதாவது சாதனை படைக்க வேண்டுமென அருணகிரி, தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Tamilnadu

Tanjore School student playing music on the Keyboard while practice yoga

பட்டுக்கோட்டை அருகே தனியார்  பள்ளியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சாதனை முயற்சியாக தனது கண்களை கட்டிக்கொண்டு  மிகவும் கடினமான பத்மா சிரசாசனம் செய்துகொண்டே, கீ போர்டில் தேசிய கீதத்தை  வாசித்து அசத்தியுள்ளார்.

Advertisment

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரில்லியன்ட் சிபிஎஸ்இ பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் அருணகிரி திருப்புகழ் (14).

4 வயதில் இருந்தே இம் மாணவர் அருணகிரி யோகா பயிற்சியில் ஈடுபட்டு, அனைத்து யோகா பயிற்சிகளையும் முறையாக கற்றுத் தேர்ந்தார். மேலும் பள்ளி ஓய்வு நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைவருக்கும் யோகா  கற்றுக் கொடுத்து வருகிறார்.

publive-image

உலக அளவில் யோகாவில் ஏதாவது சாதனை படைக்க வேண்டுமென அருணகிரி, தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று சர்வதேச  யோகா தினத்தை முன்னிட்டு  சாதனை முயற்சியாக தனது  கண்களை கட்டிக்கொண்டு மிகவும் கடினமான பத்ம சிரசாசனம் செய்துகொண்டே கீ போர்டில் தேசிய கீதத்தை வாசித்தார்.

அவரது முயற்சியை  ஊக்கப்படுத்தும்  வகையில்  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் மாணவன் அருணகிரியை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

செய்தி: எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment