Advertisment

தஞ்சையில் பயங்கரம் - வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொலை

தஞ்சாவூரில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stabbed to death

தஞ்சையில், பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் ரமணி. இவர் கடந்த நான்கு மாதங்களாக மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மதன் குமார் மற்றும் ரமணி ஆகியோர் காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்காததால், இவர்களின் திருமணம் தடைபட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மதன் குமார், இன்று காலை ரமணி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்து, அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரமணியை சக ஆசிரியர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே ரமணி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, மதன் குமாரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கொலை செய்த நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுளது. மேலும், சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் நேரில் செல்கின்றனர். விசாரணை மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜமும் பள்ளிக்கு நேரில் செல்கிறார்.

பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Murder
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment