Advertisment

திருவெறும்பூரில் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் திடீர் ஸ்ட்ரைக்: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கில் டேங்கர் லாரிகள் திடீர் ஸ்ட்ரைக் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

author-image
WebDesk
New Update
Tanker lo

திருவெறும்பூர் அருகே உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கில் தமிழ் மொழி தெரியாதவர்களை பணியில் அமர்த்திக் கொண்டு பெட்ரோல் டீசல் லாரிகளில் நிரப்ப முற்படும்போது அவர்கள் டேங்கர் லாரி ஓட்டி வரும் இளைஞர்களை அவமரியாதையாக நடத்துவது வேதனை அளிக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் டேங்கர் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் ஈடுபட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கு செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து குழாய் வழியாக பெட்ரோல், டீசல் கொண்டு வந்து இங்கு சேமிக்கப்பட்டு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால், கரூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்க்களுக்கு டேங்கர் லாரி வழியாக பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் இன்று காலை டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

WhatsApp Image 2024-11-28 at 11.37.37 (1)

இது குறித்து டேங்கர் லாரி ஓட்டுநர்கள் கூறுகையில்; ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தின் கோரிக்கைகளாக ஓட்டுனர் மட்டும் நடத்துனர் லோடு பிடிக்க ஐ.ஒ.சி.எல் அடையாள அட்டையை வைத்துள்ள அனைத்து வண்டிகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். டீலர் வண்டிகள் காலையில் லோடு பிடிப்பதற்கு அனுமதிக்கவும், மதியம் 
உணவு இடைவேளை இல்லாமல் தொடர்ந்து லோடு பிடிக்க அனுமதிக்கவும், இபாஸ் காலதாமதம் ஆகாமல் அடித்துக் கொடுக்க வேண்டும்.  

WhatsApp Image 2024-11-28 at 11.37.37

லோடு இறக்காத பங்க்கு லோடு போடுவதை தவிர்க்கவும், லோடு பில்லிங் ஸ்லிப்பில் உள்ள நேர கட்டுப்பாட்டை தவிர்க்கவும், அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த பணத்தை சரி செய்யவும், ஏசிகே பெயிண்டிங் செய்யும் பங்கிற்கு லோடு கொடுப்பதை தவிர்க்கவும், முதல் நாள் மது அருந்தி இருப்பது கருவி மூலம் கண்டறியப்பட்டால் மூன்று நாள் பணி நீக்கம் செய்யவும்,  அனைத்து வண்டிகளிலும் இ-லாக் சரி செய்து கொடுக்க வேண்டும்.

WhatsApp Image 2024-11-28 at 11.37.38

தமிழ் மொழி தெரியாதவர்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கில் வேலையில் அமர்த்தி உள்ளதால் அவர்கள் லாரி டிரைவர் மற்றும் இளைஞர்களை அவமரியாதையாக நடத்துகின்றனர். ஆகவே எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்கின்றோம் என்றனர்.  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கில் பெட்ரோல் டீசல் நிரப்பும் லாரி ஓட்டுனர்கள் கிளீனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி இருப்பதால் டெல்டா மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதால் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு விரைந்துள்ளனர். 

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment