தமிழ்நாட்டில் மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கின்றது.
மேலும் பண்டிகை தினங்களில் ரூ.150-200 கோடிகள் வரை மதுபான வியாபாரம் நடைபெறுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டன.
இதனால் அரசுக்கு ரூ.2500 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் முழுக்க முழுக்க கோதுமையினால் தயாரிக்கப்பட்ட புதிய வகை பீர் மதுபானத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனுடன் 5 மதுபானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால் பீர் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.
சாதாரண நாள்களில் 60ஆயிரம் பீர் பெட்டிகள் நாளொன்றுக்கு விற்ற நிலையில் தற்போது அது 1 லட்சம் பெட்டிகளாக அதிகரித்துள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட கோதுமையினால தயாரிக்கப்பட்ட பீர் ரூ.190க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“