/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-05T175659.540.jpg)
பிப்ரவரி 1 முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை பிப்ரவரி 1-ம் தேதி முதல் உயர்கிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விஅலி ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 180 மி.லி அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில், 375 மி.லி., 750 மி.லி., 1,000 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி., 500 மி.லி., கொள்ளளவுகளில் விற்கப்படிம் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.