டாஸ்மாக் பார்கள், உணவு பாதுகாப்பு சட்டப்படி இயங்குகிறதா? ஐகோர்ட் கேள்வி

டாஸ்மாக் பார்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் உரிமம் பெற்று தான் இயங்குகிறதா? என்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Tasmac Bar Food, Chennai High Court

டாஸ்மாக் பார்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் உரிமம் பெற்று தான் இயங்குகிறதா? என்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

டாஸ்மாக் பார்கள் தொடர்பான விவகாரம் சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்திருக்கிறது. சென்னை, திருமுல்லைவாயலில் மதுபான கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 பேரின் ஜாமீன் மனுக்களையும், மதுபான கடைகளை மூடக் கோரிய வழக்கில், ஏற்கனவே மதுபான கடைகளை திறந்திருக்கும் நேரத்தை ஏன் குறைக்க கூடாது, தமிழகத்தில் தான் அதிகளவில் மதுபானம் அருந்துவோர் உள்ளதாகவும், எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் குற்ற சதி நடக்கும் இடங்களாக திகழும் டாஸ்மாக் பார்களை ஏன் மூடக் கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் வாக்குறுதிப்படி, 2016 மற்றும் 17 ம் ஆண்டுகளில் ஆயிரம் கடைகள் மூடப்பட்டன. நடப்பாண்டில் ஆறு மாதங்கள் கடந்து விட்டன, எத்தனைகள் கடைகள் மூடப்பட்டுள்ளன எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீதிபதி பார்த்திபன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுபான கடைகள் இருக்கும் இடங்களில் இயங்கும் பார்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி முறையான அனுமதி பெற்று தான் இயங்குகிறதா என கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விகள் தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 6 ம் தேதி தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tasmac bar food chennai high court

Next Story
சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுதலைAIADMK MLA's Disqualification case, 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X