New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-16T213508.397.jpg)
tasmac bar opening chennai
குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி, முகக்கவசம் உள்ளிட்டவைகள் கட்டாயமாக்கப்பட உள்ளது.
tasmac bar opening chennai
Tasmac bar opening chennai : ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனால், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை திறக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை.இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழகத்திலும் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கூடுதலாக பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.அதில்,வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. பார்கள் திறக்கப்படும் போது சமூக இடைவெளி, குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி, முகக்கவசம் உள்ளிட்டவைகள் கட்டாயமாக்கப்பட உள்ளது.
கிளப்புகள், பப்புகள், கேளிக்கை விடுதிகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பார்களுக்கு வருவோர்கள் நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், வேறு பல நாள்பட்ட நோய் உள்ளவர்கள் ஹோட்டல்கள், கிளப்புகளுடன் இணைந்து செயல்படும் பாரினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் பார்கள், கிளப்புகள் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகள் இயங்காது பாரில் உள்ள இருக்கைகள் 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.