/indian-express-tamil/media/media_files/2025/09/09/whatsapp-image-2025-09-09-2025-09-09-15-39-23.jpg)
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு மதுபான கடைகள் மூடப்பட உள்ளன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/09/whatsapp-image-2025-09-09-2025-09-09-15-39-36.jpg)
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா. பொற்கொடி, இ.ஆ.ப. வெளியிட்ட செய்திக்குறிப்பில், 10.9.2025 அன்று சிவகங்கை மற்றும் மானாமதுரை காவல் உட்கோட்டத்தில் உள்ள 29 டாஸ்மாக் அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (FL-1) மற்றும் 3 மதுபான கூடங்கள் (FL-2) மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
11.9.2025 அன்று சிவகங்கை மாவட்டம் முழுவதும் இயங்கும் அனைத்து டாஸ்மாக் சில்லரை கடைகள், எப்.எல்.2 / எப்.எல்.3 மதுபான கூடங்கள் மற்றும் அதனுடன் இணைந்த ஹோட்டல்கள் முழுவதுமாக மூடப்படும் என அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us