தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு இன்று புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மது விற்பனையானது டாஸ்மாக் நிறுவனம் மூலம் சில்லறையாகவும் மொத்தமாகவும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மது விற்பனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடைசியாக கடந்த ஆண்டு மே மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அப்போது சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாயும் நடுத்தர மற்றும் உயர் ரக வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை தற்போது டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. அதன்படி, குறைந்த ரக மது பானங்கள் விலையில் 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபானங்கள் விலையில் 300 ரூபாயும் உயர் ரக மதுபானங்கள் விலையில் 500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
TASMAC உயரடுக்கு கடைகள் மாநிலம் முழுவதும் பரவியுள்ள 80 க்கும் மேற்பட்ட உயரடுக்கு கடைகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் 200 வகைகளை சந்தைப்படுத்தி உள்ளன.
TASMAC உயரடுக்கு கடைகளில் விற்கப்படும் இந்த சர்வதேச பிராண்டுகளின் சில்லறை விலைகள் ஜானி வாக்கர் விஸ்கி, டன்குவரே லண்டன் ட்ரை ஜின் மற்றும் சிரோக் ஓட்கா ஆகியவை ஒரு பாட்டிலுக்கு ரூ .170 முதல் ரூ .630 வரை விலை திருத்தத்தின் கீழ் வந்துள்ளன.
இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் பட்டியலில் விஸ்கி, ஓட்கா மற்றும் ஜின் போன்ற 17 வகைகள் உள்ளன. அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளிலும் செப்டம்பர் 1 முதல் மதுபான பிராண்டுகளை திருத்தப்பட்ட விலையில் விற்க வேண்டும் என்று டாஸ்மாக நிர்வாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மட்டுமல்லாது பார்களுக்கு வெளிநாட்டு மதுவகைகளை விற்பனை செய்யும் மொத்த விற்பனை கூடங்களிலும் அமலுக்கு வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் மட்டுமல்லாது தனியார் பார்கள், கிளப்களிலும் வெளிநாட்டு மதுவகைகளின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மது அருந்துபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil