'குடி'மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி - டாஸ்மாக்கில் மதுபானவிலை அதிரடி உயர்வு
liquor price hike in tasmac : தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களில் விலை கணிசமாக இன்று முதல் அதிகரிக்கப்படுகிறது. இந்த செய்தி, 'குடி'மகன்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களில் விலை கணிசமாக இன்று முதல் அதிகரிக்கப்படுகிறது. இந்த செய்தி, 'குடி'மகன்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Advertisment
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு, 5,200 மது கடைகள் உள்ளன.இந்நிறுவனம், 11 நிறுவனங்களிடம் இருந்து, மது வகைகளையும்; ஏழு நிறுவனங்களிடம், பீர் வகைகளையும்; ஒரு நிறுவனத்திடமிருந்து, ஒயினும் வாங்குகிறது. அந்த மதுபான வகைகள், அரசு நிர்ணயித்துள்ள விலையில், மது கடைகளில் விற்கப்படுகின்றன. மது விற்பனையால், ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வரி வாயிலாக, தமிழக அரசுக்கு, வருவாய் கிடைக்கிறது. அதன்படி, டாஸ்மாக் மது விற்பனையால், அரசுக்கு, ஆண்டுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...
இந்நிலையில், தற்போது, மதுபானங்களின் விலையை உயர்த்த, டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்து, தமிழக அரசு, நேற்று உத்தரவிட்டுள்ளது. இன்று முதல், பீர் மற்றும் மது வகைகள் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி, பீர் மற்றும் 180 மி.லி., உடைய, குவார்ட்டர் மது பாட்டில் விலை, 10 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், 375 மி.லி., 'ஆப்' மது பாட்டில், 20 ரூபாயும்; 750 மி.லி., 'புல்' பாட்டில், 40 ரூபாயும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வால், அரசுக்கு, கூடுதலாக, 5,000 கோடி ரூபாய் முதல், 7,000 கோடி ரூபாய் வரை, வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
3 ஆண்டுகளுக்கு பிறகு விலையுயர்வு : 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுபான விலை உயர்வு மது பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தேவையான அளவுக்கு மதுபானங்களை வாங்கி வைத்துக்கொண்ட காட்சிகளையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது.