TASMAC liquor price increased : excise duty on Indian Made Foreign Liquor increased by 15% : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் மே 7ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
Advertisment
இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை பட்டியல் மாற்றி அறிவிக்கப்பட்டு அதற்கான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தில் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஆயத்தீர்வை வரியை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. அதனால் சாதாரண வகை மதுபானங்களில் 180 மி.லி. போத்தல்களுக்கு ரூ. 10 விலை கூடுதலாகவும், அதே சமயத்தில் நடுத்தர மற்றும் ப்ரீமியம் வகை மதுபானங்கள் 180 மி.லி. போத்தல்களின் விலை ரூ.20-ம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாளை முதல் அமலுக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil