தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ம் தேதி மட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலம் ரூ.48.75 கோடிக்கு விற்பனை செய்து முதலிடம் பிடித்துள்ளது.
கொரோனாவால் பல தொழில்கள், பொருளாதாரம் சரிவை சந்தித்திருந்தாலும் இந்த 2021 புத்தாண்டில் டாஸ்மாக் மது விற்பனை மட்டும் வழக்கம் போல அதிக மது விற்பனைய செய்துள்ளது.
2021 புத்தாண்டையொட்டி, தமிழகத்தில் நேற்று டிசம்பர் 31ம் தேதி மட்டும் ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ. 48.75 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்து கோவை மண்டலத்தில் ரூ. 28.40 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ. 28.10 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ. 27.30 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ. 26.49 கோடி என்ற அளவில் மதுபானங்கள் விற்பனையானதாக் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தமிழக அரசு தடை விதித்திருந்தாலும் இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி ரூ.159 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனையாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"