/indian-express-tamil/media/media_files/HCHjTB9g7BkgsW8g26eQ.jpg)
Tasmac closed
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான திருவள்ளுவர் தினம் (ஜன.16), ஜனவரி தேதி வள்ளலார் நினைவு தினம், ஜன.ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்களும் டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுதோறும் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அரசின் இந்த அறிவிப்பை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவார்கள்.
அதன்படி, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் தினம்வள்ளலார் நினைவு தினம் மற்றும் குடியரசு தினங்களை ஒட்டி, ஜன.16, 25, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம்பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.