Tasmac liquor sold for Diwali Madurai tops the list : தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 431 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது.
கடந்த 3-ம் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.38 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ. 47.21 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.27 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.38 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.36.75 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. தீபாவளி நாளான நேற்று, சென்னை மண்டலத்தில் ரூ.41.84 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.51.68 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.46.62 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.47.57 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.37.71 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளில் ரூ.227.88 கோடிக்கு மது விற்பனையானது ஆனால், இந்த ஆண்டு ரூ.205.61 கோடிக்கு மட்டுமே விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.467.69 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.431.03 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. இதனால், கடந்தாண்டு தீபாவளி மது விற்பனையை விட ரூ.36.66 கோடி குறைந்திருக்கிறது.
சென்னை மண்டலத்தில் ரூ.79.84 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.89.95 கோடிக்கும் மது விற்பனையான நிலையில், கடந்த 2 நாட்களில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.98.89 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil