Tasmac | Lok Sabha Election | நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேலும், 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதாவது, தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி முடிவடைகிறது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும். 1ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும் நடைபெறும்.
தொடர்ந்து, 3வது கட்டம் மே 7ம் தேதியும், நான்காம் கட்டம் மே 13ம் தேதியும், 5வது கட்டம் மே 20ம் தேதியும் நடைபெறுகிறது.
இதையடுத்து, 6வது கட்டம் மே 25ம் தேதியும், கடைசி மற்றும் 7ம் கட்ட தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று (ஏப்.17,2024) முதல் ஏப்.19ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் மதுக் கடைகள், தனியார் மற்றும் சில்லறை மதுபான விற்பனை கடைகளும் மூடப்படுகின்றன.
இந்தநிலையில் ஏப்.21ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி என்பதால் அன்றைய தினமும் டாஸ்மாக் உள்ளிட்ட மதுபானக் கடைகள் மூடப்படுகின்றன.
அதேபோல் வாக்கு எண்ணிக்கை தினமான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“