ஆன்லைனில் டாஸ்மாக் மதுவை தேடும் குடிமகன்கள்: அதிகாரிகள் விளக்கம்
Tasmac online sales : இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டால், ஆன்லைனில் சதவீத பணத்தை செலுத்திவிட வேண்டும் என்றும் பின் டெலிவரி கொடுக்க வருபவரிடம் மீதிப்பணத்தை கொடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்
Tasmac online sales : இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டால், ஆன்லைனில் சதவீத பணத்தை செலுத்திவிட வேண்டும் என்றும் பின் டெலிவரி கொடுக்க வருபவரிடம் மீதிப்பணத்தை கொடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்
மதுவகைகளை ஆன்லைனில் விற்பதாக இணையவெளியில் மோசடி செய்யும் போலி இணையதளங்கள், போலி சமூகவலைதள பக்கங்களிலிருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கியுள்ள மோசடிக்காரர்கள், சமூகவலைதளங்களில் போலி பக்கங்கள், போலி இணையதளங்களை உருவாக்கி, டாஸ்மாக் மதுபானங்கள் வீட்டிற்கே வந்து டோர் டெலிவரி செய்யப்படும். ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும். போன் பே உள்ளிட்டவை ஏற்கப்படும். தரமான மதுவகைகள் என்று போன் நம்பருடன் விளம்பரம் செய்து வருகின்றன. ஆர்டர் செய்த 24 மணிநேரத்தில் டெலிவரி செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டால், ஆன்லைனில் சதவீத பணத்தை செலுத்திவிட வேண்டும் என்றும் பின் டெலிவரி கொடுக்க வருபவரிடம் மீதிப்பணத்தை கொடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். அவர்களும் அதை நம்பி, பாதி பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்திய பிறகு அவர்களை அந்த குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொள்ள இயலவில்லை.
சிலருக்கோ, அந்த எண்ணை தொடர்புகொண்டால், ஏடிஎம் கார்டு எண் மற்றும் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண் கேட்கப்படுகிறது. நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னையில், சமையல் கேஸ் டெலிவரி மேனாக உள்ளார். அவர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
ரமேஷ் கூறியதாவது, பீர் குடிக்க வேண்டும் என்று தோன்றியது, அதற்காக இணையதளத்தில் தேடிய போது இந்த இணையதளம் கிடைத்தது. அதில் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டபோது, ஏடிஎம் கார்டு எண், மொபைல் போனிற்கு வரும் ஓடிபி எண்ணை தெரிவித்தால், 10 சதவீத பணம் தற்போது எடுத்துக்கொள்வதாகவும், டெலிவரி தர வருபவரிடம் மீதிப்பணத்தை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் இதை நம்பி தகவல்களை தரவே, அவரது அக்கவுண்டிலிருந்த மொத்த பணமும் பறிபோய்விட்டது என்று அவர் கூறினார்.
மதுவகைகளை ஆன்லைனில் விற்பது போன்ற நடவடிக்கைகள் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளை அதிகரிக்கவே செய்யும் என்று சைபர் கிரைம் சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மாநிலத்தில் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனால், அவர்களை குறிவைத்து இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மாநில அரசும், காவல்துறையும் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil