TASMAC, Liquor Sale, Plastic Bottles, Chennai High Court
tasmac open near me : மதுபிரியர்களுக்கு கண்டிப்பாக இது சந்தோஷமான செய்தி தான். முக்கியமான 5 இடங்களில் 5 நவீன எலைட் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
அரசுக்கு அதிகப்படியான வருவானத்தை தரும் டாஸ்மாக் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுபிரியர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் 5 முக்கிய இடங்களில் புதிய 5 எலைட் (நவீன) டாஸ்மாக் கடைகளை திறக்க திட்டமிட்டி
ருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள எலைட் டாஸ்மாக் கடைகளால் ஆண்டுக்கு ரூ. 500 கோடி வருவாய் பார்க்கப்படுகிறது. இதில் 70% வருமானம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்படும் விற்பனை நிலையங்களிலிருந்தே வருகிறது. தற்போது இந்த பகுதிகளில் 31 எலைட் டாஸ்மாக் கடைகள் உள்ளனர். இதில் சென்னையில் மட்டுமே கடந்த ஆண்டு திறக்கப்பட்ட 10 புதிய எலைட் டாஸ்மாக் கடைகள் ஆகும்.
Advertisment
Advertisements
மாநிலத்தின் பிற பகுதிகளில் 52 எலைட் டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், புதியதாக 5 எலைட் டாஸ்மாக் கடைகள் திறக்க அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பதற்றம் முடிந்த பின்னர், முறையாக இந்த கடைகள் திறக்கப்படும் என தெரிகிறது.
இந்த புதிய 5 எலைட் டாஸ்மாக் கடைகள், சோழிங்கநல்லூர் ஜன்ஷன் ஓஎம்ஆர், கேளம்பாக்கம், ஆவடி, குங்தன்சாவடி,செங்கல்பட்டு டவுன் ஆகிய பகுதிகளில் அமைய இருப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பீர் தவிர இந்தியன் மேட் ஃபாரின் மதுபானம் மற்றும் ஐ.எஃப்.எல் ஆகியவற்றின் பிரீமியம் பிராண்டுகளை விற்கும் உயரடுக்கு கடைகள் பெரும்பாலும் மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் இயங்குகின்றன. விற்பனை நிலையங்கள் கிட்டத்தட்ட 200 பிரபலமான சர்வதேச பிராண்டுகளை விற்பனை செய்கின்றன.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் மதுபானங்கள் விலை, குறைவாகவே இருக்கும்.இதனால் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் ’குடிமக்கள்’’ புதுச்சேரிக்குச் சரக்கு அருந்த சென்று விடுவார்கள்.தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் பெரிய வித்தியாசம் இல்லாததால், தமிழகத்து குடிமக்கள் எல்லை தாண்டிப் போவதில்லை.
புதுச்சேரி மாநிலம் மது விலையை அதிகரித்ததால், எல்லையில் உள்ள விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ’’டாஸ்மாக்’’ கடைகளில் கூட்டம் அலை மோதியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil