TASMAC reopen 6 members arrested for smuggling liquor from Tamil Nadu to Puducherry
TASMAC reopen 6 members arrested for smuggling liquor from Tamil Nadu to Puducherry : பொதுவாக சென்னை மற்றும் இதர வட கடலோர தமிழகம் மாவட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் மதுபானங்களை வாங்கி அல்லது குடிக்க தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு செல்வதுதான் வழக்கம்.
Advertisment
தமிழ்நாட்டைக் காட்டிலும் புதுவையில் கிடைக்கும் மதுபானங்களின் விலை குறைவாக இருக்கும் காரணத்தால் இதனை மதுபான பிரியர்கள் தொடர்ந்து செய்து வந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுவையில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன. 46 நாட்களை கடந்த பிறகும் அங்கு மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் மே 7-ஆம் தேதி மதுபான கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு மதுபானங்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என்று கூறியது தமிழக அரசு. இரண்டு நாட்களில் 300 கோடி ரூபாய் மதிப்பிற்கு மதுபானங்களை விற்றுத் தீர்த்தது டாஸ்மாக் கடைகள்.
Advertisment
Advertisements
40 நாட்களாக தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே எல்லைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மே 3-ஆம் தேதியிலிருந்து சில தளர்வுகள் ஏற்படுத்தி, இரு பகுதியில் இருந்தும் மக்கள் போக்குவரத்து, அவசியமான காரணங்களை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தது.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட உழவர்கரை உமர், கண்டமங்கலம் நாகராஜ், ஒதியம்பட்டு முருகன் மற்றும் திருக்கனுர் செந்தில்க் குமார் ஆகியோர் புதுவையிலிருந்து விழுப்புரத்திற்கு மதுபாட்டில்களை வாங்கி புதுவையில் விற்க முயற்சி மேற்கொண்டனர். இந்த நான்கு நபர்களை திருக்கனுர் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது மது கடத்தல், ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படுதல் மற்றும் நோய் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், தமிழகத்தில் அவர்கள் வாங்கி வந்த மதுபானங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று ஏழாம் தேதி செல்லிப்பட்டு சரவணன் மற்றும் மனவெளி ரமேஷ் ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பகுதியில் மது வாங்கி வந்து புதுவையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயற்சி செய்தனர். அவர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறது காவல்துறை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil