TASMAC Reopen Salem Omalur school had been used to distribute liquor token : 44 நாட்கள், மதுவின் வாசமில்லாமல் பல ஏழை கூலித் தொழிலாளர்களின் வீடுகள் விடிந்திருக்கும். ஆனால் நேற்று ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாறியது. பல மதுபான ப்ரியர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்கி மதுபானங்களை பெற்றுச் சென்றனர். சில இடங்களில் போதுமான சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கூட்டத்தில் முந்தி அடித்துக் கொண்டு மதுவாங்க மக்கள் போட்டியிட்டதை பார்த்தால் கோயம்பேடு போன்ற நிலை உருவாகுமோ என்ற அச்சம் அனைவரும் மனதிலும் எழுந்துள்ளது.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குடிகாரர்களுக்கு, காவல்துறையினர் பாதுகாப்பில் டோக்கன் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தை மதுபான விற்பனைக்கு பயன்படுத்தியுள்ளது பெரும் வெட்கக் கேடான விசயம் என்று எதிர்கட்சியினர் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மூன்று டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று மதுபான கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மதுபிரியர்களுக்கு சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு பள்ளிக்கூடத்தில் டோக்கன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த விவகாரம் ஓமலூர் தாசில்தார் காதில் விழ, விரைந்து சென்று டோக்கன் கொடுப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“